உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மயிலிட்டி மக்கள் 23ஆவது வாரமாகவும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
92 பார்வைகள்

மயிலிட்டி மக்கள் இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது வாரத்தையும் எட்டியுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பதாக அரச தரப்பால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நடைமுறை ரீதியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எமது பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நேரம் காணிகளை விடுவிப்போம் என்று கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அடுத்தவர் மீது விரலை நீட்டும் நிலை தொடரக்கூடாது.

சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், எமது காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பாக இராணுவத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பானவர் என்ற வகையில் நேரடியாக நடவடிக்கை எடுத்து தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

23 வாரங்களாகத் தொடரும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமது பூர்வீக நிலங்களுக்கு மீளச் செல்லக்கூடிய வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மயிலிட்டி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0