உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மனைவியை கொ**லை செய்த கணவன்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
84 பார்வைகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது;
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன் வாசன் என்பவர் தங்கராசா பிரதீபா என்ற பெண்ணை திருமணம் முடித்த நிலையில் 10 மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவ தினமான வியாழக்கிழமை (24) மனைவியின் கையடக்க தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து அந்த பணத்தில் மதுபானம் வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனை பற்றி முறையிடுவதற்கு சென்ற நிலையில் மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் தனது தாயார் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிஸ் அவசர சேவை 119 அறிவித்ததையடுத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்தாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த நபர் கடந்த மாதம் 24ம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

71 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

57 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0