உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

ஐநா பொதுச் சபையில் கடுமையாகப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் : வெளிநடப்புச் செய்த பிரதிநிதிகளை ‘ஒழுக்கமற்றவர்கள்’ என சாடல்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
108 பார்வைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஆரம்பித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்த நிலையில், அவர் தனது உரையில் நிவ்யோர்க் நகர முதல்வர் சோஹ்ரன் மம்தானி உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் மேடையேறியபோது பல நாடுகளின் பிரதிநிதிகள் சபையிலிருந்து வெளியேறினர்.

அவர்களைப் பார்த்த நெதன்யாகு, “இந்த மண்டபத்தை விட்டு இன்னும் வெளியேறாத வேறு ஏதேனும் ஒழுக்கமற்றவர்கள் இருந்தால், தயவுசெய்து இப்போது வெளியேறுங்கள்” எனப் தெரிவித்ததுடன், தனது நாட்டைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் பொய்யை பரப்புபவர்கள் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் இனப்படுகொலை அல்ல என்றும், அது காசா மக்களையும் இஸ்ரேலையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்றும் அவர் நியாயப்படுத்தினார்.

நிவ்யோர்க் நகர முதல்வர் சோஹ்ரன் மம்தானி தன்னை நிவ்யோர்க்கிற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றதாகவும், தனது குரலை ஒடுக்கப் பார்த்ததாகவும் குறிப்பிட்ட நெதன்யாகு, “உங்களால் உண்மையை ஒடுக்க முடியாது” என்றார்.

அத்துடன், மம்தானி தனது நாட்டைப் பற்றியும் இஸ்ரேலியப் படையினர் மீதும் ஆதாரமற்ற பொய்களைப் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி திறன்களை நொறுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விடச் சிறந்த பங்காளி யாருமில்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; 14 பேர் உ**யிரிழப்பு.!

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று…

96 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் தொடுத்தால் இந்தியப் பெருங்கடலுக்கும் போர் பரவும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தனக்கு எதிராக மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கு மோதலை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக…

94 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெள்ளை மாளிகைக்கு விஜயம்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சீன ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி…

91 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்க்கு மகத்தான வரவேற்பளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில்,…

89 0 0