உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
80 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் கழிவுகள் அழுகி, புழுக்கள் பெருகி கடும் துர்நாற்றம் வீசுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் குற்றச்சாட்டுகின்றனர்.

யாழ் மாநகர சபையால், சுமார் 80 இலட்சம் ரூபாவுக்கு வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சந்தையில், சந்தையின் உட்புற சுத்தம் அதனுடன் தொடர்புடைய கழிவகற்றல் பணிகளை குத்தகைதாரரும், பொதுவான வெளி சுகாதார மற்றும் கழிவகற்றல் நடவடிக்கைகளை மாநகரசபையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில், இரு தரப்பினரின் பொறுப்புகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சந்தையில் வெட்டப்படும் மீன்களின் கழிவுகள் உரிய நேரத்தில் அகற்றப்படாமல் வாய்க்காலுக்குள் கொட்டப்பட்டு தேங்குவதால் அவை அழுகி, புழுக்கள் பெருகுவதுடன் கடும் துர்நாற்றமும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சந்தைக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்கள் சுகாதார அச்சுறுத்தலுடன் கூடிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தை குத்தகை மூலம் மாநகரசபைக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் நிலையில், பொதுமக்களிடம் தவறாது வரி அறவிடும் மாநகரசபை, அதற்கேற்ப சுகாதார வசதிகளையும் கழிவகற்றல் நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் நீடிப்பது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தையை சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலாக மாற்ற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…

62 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

88 0 0
இலங்கை செய்திகள்

கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…

81 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலை பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.!

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை…

70 0 0