கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம்.!
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 24.09.2026 நடைபெற்றது.
மாவட்டத்தில் எல்நினோவை எதிர்கொண்டு பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் கால்நடை வளர்ப்பு, விதைநெல் உற்பத்தி, கமநல அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கமநல காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கதிபர், மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர், துறைசார்ந்த திதணைக்கள தலைவர்கள், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கால்நடை கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.




