யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற 15ஆவது இலங்கை பொருளாதார ஆராய்ச்சி மாநாடு.!
இலங்கையைப் புனரமைத்தல்: பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பாதைகள்” என்ற தொனிப்பொருளில் 15ஆவது இலங்கை பொருளாதார ஆராய்ச்சி மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கை பல்கலைக்கழக பொருளியல் வல்லுநர்கள் மன்றம் (SLFUE) குறித்த மாநாட்டினை ஒவ்வொரு ஆண்டும் நடாத்தி வருகின்றது. 15ஆவது மாநாடானது யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் 15ஆவது மாநாட்டின் தலைவர் கலாநிதி சத்தியமூர்த்தி சாருஜன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி கலந்து கொண்டார். நிகழ்வில் இணைப்பேராசிரியர் பொருளாதாரம் மேத்தா குடும்ப நிலைத்தன்மைப் பள்ளி, இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி மோகனசுந்தரி தங்கவேல், உதவிப் பேராசிரியர் சமூகத் தகவல் அறிவியல் பள்ளி, அயோயாமா ககுயின் பல்கலைக்கழகம், டோக்கியோ, ஜப்பான் கலாநிதி யமடா ஷோ, ஏனைய பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார்ந்தோர், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









