உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
82 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எம் மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பசி இருந்து இந்த மண்ணுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகத்தின் தீ திலீபன் அண்ணா அவர்களது 39ஆவது வருட நினைவு தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஓர் நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அதற்கு வலுச் சேர்க்குமாறு அனைத்து தரப்புக்களையும் அழைத்து நிற்கின்றோம்.

இந்த போராட்டமானது 2026-09-25 அன்று (வெள்ளிக்கிழமை) பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய…

74 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாட்டுடன் மோதிய வாகனம்.!

திருகோணமலை, தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதிய விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்…

85 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பை வரவேற்கின்றோம்; பிரதான சூத்திரதாரிகளையும் சட்டத்தால் தண்டிக்க வேண்டும்.!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், “எய்தவன் இருக்க…

73 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை உடனடியாக மன்னித்து விடுவியுங்கள்.!

சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்…

68 0 0