உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிசெம்பரில் அமெரிக்காவுக்குப் பயணம்

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
87 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி புளோரிடாவுக்குச் சென்றால், டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ‘ட்ரம்ப் நேஷனல் டோரால் மியாமி’ (Trump National Doral Miami) ரிசார்ட்டில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ட்ரம்ப்புடன் இருதரப்புச் சந்திப்பு ஒன்றையும் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தப் பயணம் குறித்தும் அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வர்த்தகம் மற்றும் பிற இருதரப்பு ஒத்துழைப்புத் துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், மோடி-ட்ரம்ப் இடையிலான இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்திய இறக்குமதிகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் நிலவும் பின்னணியில், இந்தச் சந்திப்புக்கான சாத்தியக்கூறு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அத்துடன், இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் ஜி20 கூட்டத்தில் பங்கேற்பதைத் தாண்டி மேலும் பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் இறுதியாக கடந்த ஜூன் மாதம் பிரான்ஸின் எவியன் (Evian) நகரில் நடைபெற்ற ஜி-7 (G7) உச்சிமாநாட்டின்போது சந்தித்தனர்.

வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சார்ந்த முன்னேற்றங்களை ஆய்வு செய்த இரு தலைவர்களும், இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்தனர்.

அண்மைய மாதங்களில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் தொடர்ச்சியான உயர்மட்ட ஈடுபாடு காணப்படுகிறது.

வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவை ஒத்துழைப்புக்கான முக்கியத் துறைகளாக உருவெடுத்துள்ளன.

இரு நாடுகளும் ஒரு விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இருதரப்பு வர்த்தகம் தற்போது சுமார் 240 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் இதனை 500 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் இலக்கை இரு தரப்பும் நிர்ணயித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ (Quad) அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாட்டை, ஜி-20 (G20) கூட்டத்தின் ஒரு பகுதியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட துறைகளில் குவாட் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ராஜதந்திர வட்டாரங்களின் தகவலின்படி, புளோரிடாவிற்கான தனது சாத்தியமான பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கனடாவிற்கும் இருதரப்புப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் வர்த்தக அமைச்சரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி-20 (G20) உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடிக்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தற்போது ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம்’ (CEPA) தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப்…

104 0 0
இந்திய செய்திகள்

இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் இலங்கை தொடர்பான முக்கிய முடிவு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான வரைவு அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான…

95 0 0
இந்திய செய்திகள்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய்கான ஆதரவு குறைவு!

தமிழ் நாட்டில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப் பிரசாரம் தீவிரமாகியுள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் குறித்த இரண்டு தொகுதிகளிலுமே…

81 0 0
இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

57 0 0