உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 15 பேர் குற்றவாளிகள்.!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
24 பார்வைகள்

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, குறித்த 24 பிரதிவாதிகளில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 09 பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் இன்று (22) அறிவிக்கப்படவுள்ளன.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தன.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

21 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

16 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

22 0 0
இலங்கை செய்திகள்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு…

27 0 0