முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி.!
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான விவசாயிகள் முருங்கைச் செய்கையில் ஈடுபடுகிறார்கள்.
புன்னைநீராவி, கல்லாறு, பிரமந்தனாறு, மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் பலர் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து முருங்கைச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அதிகளவான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில் தற்பொழுது முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 40 தொடக்கம் 50 ரூபாவிற்கு வியாபாரிகள் கொள்வனவு செய்வதாக செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற முருக்கங்காய் கிலோ ஒன்று 150 தொடக்கம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
குறித்த முருங்கைக்காயினை சிறந்த விலையில் சந்தைப்படுத்த இயலாமையால் முருங்கைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கத்தின் மத்தியிலும் பாதிக்கப்பட்டுள்ள முருங்கைச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.