உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
21 பார்வைகள்

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழு, சமூக உளநலம், போதை தடுப்பு மன்றக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், பாடசாலை இடைவிலகல், சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் எம்.பிரதீப், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், தொழில் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவது காலத்தின் தேவை.!

இனம், மதம், மாகாணம், மாவட்டம், கிராமம் மற்றும் நகரம் எனப் பிரிந்து நிற்காமல் இலங்கையர்களாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். இந்நடவடிக்கையில் தேசிய…

16 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்.!

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப…

33 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் படகுச் சவாரி நிறுத்தம்.!

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகுச் சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில்…

26 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்…

20 0 0