அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்.!
சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழிகோல வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கோரிக்கை. முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மகஜரும் கையளிக்கப்பட ஏற்படாடு செய்யப்பட்டது.
நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பேரணியாக யாழ். இந்திய துணை தூதரகம் வரை செல்கிறது. பாரதப் பிரதமருக்கான கோரிக்கை மகஜர் தூதரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் தலைவர் தரணீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசிய மகா சபையினர், முஸ்லிம் சகோதரர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





