கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!
கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் காலை 10.00 மணியளவில் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மக்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது கழிவுகளை கொட்டுவதற்காக வாகனங்கள் அத்துமீறி உள்ளே சென்றன. வாகனங்களுடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் மயூரன் வந்துள்ளார். இதனால் மக்களுக்கும் அவருக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.


