உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

22 ஆவது திருத்தத்தை எம் மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
19 பார்வைகள்

அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், எமது மக்கள் சக்தியைக் கொண்டு அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பாகமுவ பாங்கொல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் நிலவும் சூழ்நிலையில், அரசு 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகின்றது.

இந்தத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஜனநாயகம், நீதி வழங்கும் பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சீர்குலைக்கப்படுவதுடன், நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக மாற்றி நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், மக்கள் சக்தியைக் கொண்டே இந்தத் திருத்தத்தை முறியடிக்க வேண்டும்.

மக்கள் சக்தியை எப்போதுமே அற்பமாக எடைபோட முடியாது. இதே மக்கள் சக்தியினாலேயே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டுக்குச் செல்ல நேரிட்டது.

நாட்டில் அநுரகுமார திஸாநாயக்க தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்கின்றார். இந்தச் சர்வாதிகாரப் பயணத்துக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட பல அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் பொய் மற்றும் ஏமாற்றுகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே நுகர்வோருக்கு எரிபொருளை வழங்குதல் போன்ற எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதுபோல் எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படவோ அல்லது பொருட்களின் விலைகள் குறைக்கப்படவோ இல்லை. குறைந்தபட்சம் 12 இலட்சம் ரூபாவுக்கு ‘விட்ஸ்’ ரக கார் கூட கிடைக்கவில்லை.

மீனவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட செயலி இன்னமும் வழங்கப்படவில்லை. மீன்பிடி மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு மேலதிக வற் வரிகளை விதித்து அரசு மக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.

நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். உற்பத்திச் செலவு 137 ரூபாய் ஆகும் நிலையில் விவசாயிகளுக்கு 120 ரூபாவே வழங்கப்படுகின்றது.

வறுமை அதிகரித்துள்ள நிலையில் ‘அஸ்வெசும’ நிவாரணம் கூட வெட்டப்பட்டு வருகின்றது. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் ‘பராட்டே’ சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றது.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. ரணசிங்க பிரேமதாஸவினால் தொடங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பு வந்தால் நிபந்தனையற்ற ஆதரவு.!

இலங்கையின் அரசமைப்பில் தொடர்ச்சியாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்தால், தான் அரசுக்கு வெளியே இருந்துகொண்டு அதற்கு…

2 0 0
இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. கைது.!

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சியை மாற்றிய மக்கள் போராட்டம் முறைமையை மாற்றவே நடத்தப்பட்டது.!

மக்கள் போராட்டத்தின் பின்னர் உருவான அரசியல் சூழலைப் பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள், முறைமையை மாற்றுவோம் என்று கூறிவிட்டுத் தற்போது அதே முறைமையின் ஒரு பகுதியாக…

17 0 0
இலங்கை செய்திகள்

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) கலணிகம (Galanigama) மற்றும் தொடங்கொட (Dodangoda) ஆகிய பகுதிகளுக்கு இடையே வீதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப்…

10 0 0