உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

மழை அதிகரிக்கும் வாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
14 பார்வைகள்

இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பெண்ணொருவர் உ**யிரிழப்பு.!

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34)…

30 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் அனோஜனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ரிசாத் பதியுதீன்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

26 0 0
இலங்கை செய்திகள்

யாழில் கடலாமைகளுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை இரண்டு கடலாமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடலாமைகளுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

33 0 0
இலங்கை செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் தில்லுமுல்லு.!

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் இருந்து பிரதேச சபையின் உறுப்பினர் தயாபரன் அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது…

31 0 0