உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

கிளிநொச்சியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் நெல் கொள்வனவு ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
23 பார்வைகள்

நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25மில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளினை அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று18.09.2026 மேற்கொண்டனர்

கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு இடம்பெற்றது. குரல் பதிவு அரிசி ஆலை உரிமையாளர் பொன்னம்பலம் திருஞானசம்மந்தன் மற்றும் விவசாயிகளின் குரல் பதிவு

குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் முன்பு எந்த அரசாங்கமும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக நெல் கொள்வனவினை நிறுத்தியவை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை இந்த வட்டியும் இன்றி வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தமைபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் தற்போதைய அரசாங்கத்தினருக்கு ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் திலீபனின் நினைவுத் திடலில் பொருத்தப்பட்டிருந்த ஒலி எழுப்பிகள் பொலிசாரால் அகற்றல்!

திலீபனை நினைவுகூர்வதற்காக, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலி எழுப்பிகளை பொலிஸார் அகற்றிச் சென்றுள்ளனர். பொது இடத்தில் உரிய…

22 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் நூதன முறையில் போராட்டம்!

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர். குறித்த போராட்டமானது இன்று(18.9.2026) மதியம் 2 மணியளவில்…

20 0 0
இலங்கை செய்திகள்

இராணுவம் ஆக்கிரமித்துள்ள முள்ளியவளை தபாலக காணியை விடுவித்து நிரந்த கட்டடத்தை அமையுங்கள்.!

முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள காணியை 2026ஆம் ஆண்டுக்குள் விடுவித்து அஞ்சல் திணைக்களத்திடம் முறையாகக் கையளிக்க நடவடிக்கை…

29 0 0
இலங்கை செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

22 0 0