மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் ஆரம்பமான MSPL 2026.!
மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் நடைபெறும் மன்னார் Softball Premier League – MSPL 2026 போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழன் மாலை (17) மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இதன்போது போட்டித் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் அறிமுகம் செய்யப்பட்டதுடன், MSPL 2026 வெற்றிக் கிண்ணமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மன்னாரில் மின்னொளி வெளிச்சத்தில் இவ்வாறானதொரு பிரமாண்டமான Softball போட்டித் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் நகர சபை தலைவர் மற்றும் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டித் தொடரை ஆரம்பித்து வைத்தனர்.
இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றதுடன், லீக் முறையில் மொத்தம் 28 போட்டிகள் நடைபெறவுள்ளன.
MSPL 2026 போட்டித் தொடர் செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.





