உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் ‘டித்வா’ போன்ற மற்றொரு பேரழிவு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
47 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது ‘டித்வா’ போன்றே மற்றொரு பாரதூரமான பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன் மூலம் ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்க அரசு செயற்பட்டு வருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“22 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டம் இதுவாகும்.

இது ஜனநாயகத்தைச் சுருக்கி, நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முறையை உருவாக்கும் செயற்பாடாகும்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்காவிட்டால், மக்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வுச் சமன்பாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

எல் நினோ மற்றும் லா நினோ நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள் காலாவதியாகிவிட்டன. பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்னரே தாக்கங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

45 0 0