உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

‘எல்நினோ’ தொடர்பான நடைபவனி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
28 பார்வைகள்

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம்
ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று (16.09.2026) பிரதேச சபையின் தலைவர் கந்தையா இராஜ்குமார் தலைமையின் கீழ் இடம்பெற்றது.

எமது பிரதேசத்தின் சுற்றாடலை பாதுகாப்போம் எனும் கருப்பொருளின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபை முன் தொடங்கி மஸ்கெலியா நகரம் வரையில் ‘எல்நினோ’ தொடர்பான நடைபவனி இடம்பெற்றது .

எல் நினோ (El Niño) என்பது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் மேற்பரப்பு நீர் இயல்பை விட அதிகமாக வெப்பமடைவதைக் குறிக்கும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும்.

இந்த வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலை அமைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, சில பகுதிகளில் கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் உருவாகின்றன.

இந்த விடயம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களை கொண்டு பேரணி முன்னெடுக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய…

26 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் ஒழிப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இரட்சணிய சேனையின் பங்களிப்பு.!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கான சமூகத் தாக்கங்கள் மற்றும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தான வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அதன்…

40 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி உ*யிரிழப்பு.!

கொழும்பு, தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொடை களு…

44 0 0
இலங்கை செய்திகள்

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்றைய தினம் (17) கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாட்டின்…

44 0 0