உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

மருதமுனையில் சமூக நீதிக் கட்சியின் பொதுக் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
32 பார்வைகள்

“இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக நீதிக் கட்சியின் தலைவரும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மருதமுனை இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் தலைமை உரையாற்றிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் உரையாற்றுகையில்,
“சமூக நீதிக் கட்சி என்பது வெறுமனே இளைஞர்களுக்கான கட்சி மட்டுமல்ல, மாறாகச் சமூகத்தின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இயக்கம். மக்களிடம் காணப்படும் பிரச்சினைகள் வெறும் பேசுபொருளாக மாத்திரம் நின்றுவிடாமல், அவற்றைச் சரியான முறையில் அரசியல் மயப்படுத்தித் தீர்வுகாண வேண்டும். இதற்கு எமது கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். அரசாங்கத்தின் நேர்மறையான விடயங்களை ஆதரிப்பது, தவறு நடைபெறும் போது காத்திரமான விமர்சனங்களை முன்வைப்பது என்பது எமது அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல; 100 வருடங்களுக்கு முன்னர் எமது கொள்கை வழிகாட்டிகளின் அரசியல் நிலைப்பாடாகவும் அதுவே இருந்தது.

அந்த வகையில், மருதமுனைக் கிராமத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகளான கடலரிப்பு மற்றும் மேட்டுவட்டைக் காணிப் பிரச்சினைகள் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுத் தீர்வுகள் காணப்பட வேண்டும். மூத்த அனுபவசாலிகளையும் இளைஞர்களையும் இணைத்துப் பயணிப்பதன் ஊடாக எமது பிரதேசப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்க்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பகிரங்க பொதுக் கூட்டத்தில் மருதமுனையின் பொதுப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் சமூக நீதிக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனப் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சமூக நீதிக் கட்சியின் தவிசாளர் நஜா முஹம்மத், சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமட், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடகச் செயலாளர் ஸப்ரீன் அஹமட் மற்றும் உயர்பீட உறுப்பினர் ராகுல் ஸஜீத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

39 0 0