சூடானில் தங்கச் சுரங்க விபத்து : 70 ற்கும் அதிகமானோர் உயி@ரிழப்பு!
சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு அருகில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த பல சுரங்கப் பாதைகள் நேற்று சரிந்து வீழ்ந்தன.
இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சிறப்பு மீட்புக் குழுக்கள் எதுவும் உடனடியாக வராததால், பிரதேச மக்களும் சக தொழிலாளர்களும் எளிய கருவிகளைக் கொண்டு இரவோடு இரவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.