உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் டிப்பருடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து : பெண் உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
160 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் இன்று (16.09.2026) பிற்பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

112 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0