ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது
ஓய்வூதிய உரிமையற்ற பொதுமக்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் ஓய்வூதியம் கிடைக்கச் செய்யும் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு 2025ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் இன்று (16) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே இவ்விருது வழங்கப்பட்டது.
ஓய்வூதிய உரிமையற்ற பொதுமக்களை அடையாளம் கண்டு, அவர்களை சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இணைத்து, தேசிய மட்டத்தில் சிறப்பான அடைவைப் பெற்றமைக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய வேலைத்திட்டம் பொதுமக்களை சென்றடைய செயற்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இவ்விருதினை சமர்ப்பிப்பதில் பெருமை கொள்வதாக பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவர்கள் தெரிவித்தார்.
இத்திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இவ்விருதை சமர்ப்பிப்பதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


