உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

க@ஞ்சா கடத்தல்காரர் “பத்தல ஹீன்பாசி” என்பவரின் சொத்துக்கள் முடக்கம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
146 பார்வைகள்

பாரிய அளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும், 180 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்குப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.

“பத்தல ஹீன்பாசி” என அழைக்கப்படும் ஜெயசிங்க ஆராச்சிகே ஹேமந்த ஹேமந்த எனும் கஞ்சா கடத்தல்காரர் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸ் தலைமையகத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் தம்புத்தேகம, கிராவல்வத்தை மற்றும் மிதெனிய ஆகிய பகுதிகளில் வாங்கப்பட்ட காணிகள், கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட 8 சொத்துக்கள் இரண்டு வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. சந்தேகநபரின் இரண்டாவது மகனின் பெயரில் 35 மில்லியன் ரூபா பெறுமதியில் வாங்கப்பட்ட சொகுசு ஜீப் வண்டி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது

குறித்த மகனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், இச் சொகுசு வாகனம் சட்டவிரோதப் பணத்தின் மூலமே வாங்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கமைய 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், குறித்த ஜீப் வண்டியும் இன்றிலிருந்து புதன்கிழமை (16) நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் கைப்பற்றப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

113 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0