உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்குப் பயணம்!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
58 பார்வைகள்

“ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்னாஸ் அரக்ச்சி ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்காக பெய்ஜிங் (Beijing) செல்லவுள்ளார்.

பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கவும், அமெரிக்கா-ஈரான் இடையிலான முட்டுக்கட்டையை உடைக்கவும் சீனா, சமரசத் தூதராகப் செயல்பட முடியுமா என்பது குறித்து இந்த பயணத்தின் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிராந்திய பாதுகாப்பை வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி பிராந்திய நாடுகளே கையாள வேண்டும் என்பதை ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியிலும் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாகவும், மத்திய கிழக்கில் முக்கிய ராஜதந்திர சக்தி வாய்ந்த நாடாகவும் சீனா திகழ்கிறது.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

31 0 0
உலக செய்திகள்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச்…

36 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம்…

31 0 0
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக…

37 0 0