உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
161 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், 135 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் த. தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

குறித்த பாடசாலையில் இம்முறை 14 மாணவர்கள் 135 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் சிறப்பான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 79.59 சதவீத சித்தி வீதத்தைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களுள் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் உள்ள 100 கல்வி வலயங்களுள் 10ஆவது இடத்தையும் திருக்கோவில் கல்வி வலயம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக S. ஸ்ரீரங்கநாதன், S. நபீஸ் முஹம்மட், A. நசீர், A.M. நௌபர்மீன், S. அம்ஜத் கான், K. கங்காதரன் ஆகிய வலயக் கல்விப் பணிப்பாளர்களும், S. செல்வம் (ADE), K. லிங்கேஸ்வரன் (கணக்காளர்), S. விக்னேஸ்வரன் (விரிவுரையாளர்), K. கஜேந்திரன் (முகாமையாளர், People’s Bank) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், விசேட அதிதிகளாக S. மருதமாறன் (EPSI), M. யோகராஜன் (SSDO), T. தருமரெத்தினம் (ISA), P. பார்த்திபன் (ISA), செல்வி ஜெ. ஜெகதா (Director – Aara Welfare Society) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை, சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை உள்ளிட்ட கிராம அமைப்புகளின் பிரதிநிதிகளும், திருமதி தி. கவிதா, திரு. பா. சத்தியசிவம், திரு. M. சந்திரகுமார், திருமதி ஜெயதர்சினி ரவீந்திரன், P. ரஜிந்தன், இ. சுரேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் இந்நிகழ்வின்போது பாராட்டப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

107 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

114 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

132 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0