உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தற்போதைய அரசு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்தித்துள்ளது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
90 பார்வைகள்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் முன்னரே, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மக்களால் வெறுக்கப்பட்ட, பலவீனமான மற்றும் அதிருப்திக்குள்ளான ஒரு அரசாங்கமாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (14) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த மக்களுக்குத் தனது கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை வரலாற்றில் பலம்மிக்க மற்றும் பலவீனமான பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிப் பீடமேறியுள்ள போதிலும், ஒரு அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கோ அல்லது மக்கள் மத்தியில் அதிருப்தியடைவதற்கோ குறிப்பிட்ட காலம் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு தூரம் பலவீனமடைந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசாங்கம் உருவானது நாட்டின் நவீன வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுன அனுராதபுர பேரணியை ஏற்பாடு செய்ததை அறிந்த நாளிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், தேர்தல் இல்லாத ஒரு காலத்தில் முன்னாள் தலைவர்கள் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதற்காகவே இவ்வாறான நிகழ்வுகளை நடத்தியதாக நினைவூட்டினார்.

எனினும், தற்போதைய ஜனாதிபதி எவ்வித அபிவிருத்தித் திட்டங்களும் இன்றி, தேர்தலுக்கு முன்னர் வழங்கியது போல் மீண்டும் பொய் வாக்குறுதிகளை வழங்கி, கூட்டங்களை நடத்தி நாட்டின் நிதியையும் நேரத்தையும் விரயம் செய்து வருவதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் அடுத்த அரசாங்கத்தில் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

மேலும், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளில் நாட்டின் அபிவிருத்தி குறித்துப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையுமே தொடர்ச்சியாக விமர்சித்து வருவதன் மூலம் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெளிவாவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எவ்விதப் பயனும் தராத இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொண்டு பொதுமக்கள் தமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை, பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைக் செலவு காரணமாக பொதுமக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக அரசாங்கம் அதனை மேலும் மோசமான நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, ஜனாதிபதிக்குத் தன் மீது உண்மையில் நம்பிக்கை இருக்குமானால், மக்கள் பணத்தை வீணடித்துப் பொய் வாக்குறுதிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இனிமேலாவது நாட்டின் உண்மையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

115 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

117 0 0
இலங்கை செய்திகள்

யாழில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது.!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில், டி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 துப்பாக்கி ரவைகளுடன் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…

134 0 0
இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

127 0 0