உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
36 பார்வைகள்

2017 ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருவது முரண்பாடானது என்று குறிப்பிட்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோருகின்றார்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசுதான் மாகாண சபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது. அன்றைக்கு அந்தப் பழைய தேர்தல் முறைமை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்கின்றார்கள்.

முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அது முறையற்றதொரு அரச நிர்வாகமே தோற்றம் பெற வழிவகுக்கும். எனவே, தேர்தல் முறைமையில் உள்ள சட்டச் சிக்கல்களுக்கு முரண்பாடற்ற வகையில் முறையான தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை.!

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.…

26 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொ*லை.!

அனுராதபுரம், பரசன்கஸ்வெவ – வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச்…

47 0 0
இலங்கை செய்திகள்

மக்களை ஒருபோதும் நாம் கைவிடமாட்டோம்; அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.!

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…

20 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

40 0 0