உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

ஈராக்கின் ஆயுதக்குழுவுக்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா!

உலக செய்திகள் 1 வாரம் முன்
155 பார்வைகள்

ஈரானுடன் தொடர்பில் உள்ள ஈராக்கின் ஆயுதமேந்திய துணை இராணுவக் குழுவான கதைப் ஹிஸ்புல்லா (Kataib hezbollah) அமைப்புக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்” (Operation Economic Outcast) என்ற நடவடிக்கையின் கீழ் கதைப் ஹிஸ்புல்லா மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் பிரசார நிதி வலையமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் தோமஸ் பிகட் (Thomas Pigott) அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவால் “பயங்கரவாத” அமைப்பாகப் பெயரிடப்பட்டுள்ள கதைப் ஹிஸ்புல்லா மத்திய கிழக்கில் வன்முறையைத் தூண்டுவதற்கும் ஈரானின் நலன்களைச் செயல்படுத்துவதற்கும் ஒரு கருவியாகச் செயல்படுவதாக வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் குறித்த அமைப்பு, ஈராக் மற்றும் லெபனானின் பாதுகாப்புக்கும் அமெரிக்க ராணுவ மற்றும் இராஜதந்திர வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக செயற்படுவதாகவும் வொஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை. ஈராக்கில் உள்ள துணை ராணுவக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கலைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவை கதைப் ஹிஸ்புல்லா அமைப்பு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

அத்துடன் “எதிர்ப்பு ஆயுதங்களை” தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தங்களது ஆயுதக் களஞ்சியத்தை மேலும் மேம்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

18 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0