உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ரஷ்யாவில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவு!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
117 பார்வைகள்

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் (St Petersburg) அமைந்துள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், செப்டம்பர் 18-க்குள் தூதரகம் தன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஜெர்மனி கடந்த வாரம் தனது நாட்டில் இருந்த இரண்டு ரஷ்ய தூதரகங்களை மூடியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

லீப்ஜிக் வானுார்தி நிலையத்தின் (Leipzig Airport) மீது நடத்தப்பட்ட தோல்வியுற்ற ஆளில்லா வானுார்தி தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என முன்னர் ஜெர்மனி குற்றம் சாட்டியதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் தோன்றியுள்ளது.

இந்தநிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து தூதர்கள் மற்றும் ஊழியர்கள் செப்டம்பர் 18-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் ‘கோதே-இன்ஸ்டிடியூட்’ (Goethe-Institut) மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

யுக்ரைன் போர் விவகாரத்தில் ஜெர்மனி , யுக்ரைனுக்கு தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருவதால், மொஸ்கோ – பெர்லின் இடையேயான இராஜதந்திர உறவுகள் வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0