உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

சைவத் திருக்கோவில்களின் திருவிழாக்களில் களியாட்டங்களை முற்றுமுழுதாக நிறுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
57 பார்வைகள்

நேற்று இரவு எமது யாழ். மாவட்ட சைவத் திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என
தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருமை விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

சைவ பரிபாலன சபை, இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை, கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது வரவேற்கத்தக்கது.

ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல் நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.

இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள் குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கோருவதுடன் அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

16 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

53 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

60 0 0
இலங்கை செய்திகள்

AI ஐ அதிகாரிகளுக்கு மாற்றீடாக அன்றி அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும்!

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும்…

42 0 0