உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

பெண்ணொருவருக்கு நெஞ்சுக்கு பதிலாக அக்குளில் சத்திர சிகிச்சை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
134 பார்வைகள்

நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திர சிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல்லிப்பழை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதியைப் பெறுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன்னரும் இவ்வாறாக தவறான முறையில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

1 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

118 0 0