உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

எங்கள் வழியில் குறுக்கிட்டால், ஓமானைக் கடுமையாகத் தாக்குவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
34 பார்வைகள்

ஈரானுடனான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமான் தலையிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, “ஓமான் எங்கள் வழியில் குறுக்கிட்டால், அந்த நாட்டை கடுமையாக குண்டுவீசித் தாக்குவோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் அதிகாரிகளுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பின்னணியிலேயே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மேலும், ஈரான் சரணடைவதற்கான வெள்ளைக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் சிறந்த போக்கர் வீரர்கள். ஆனால் அவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனக்கென எந்த காலக்கெடுவும் இல்லை என்றும், தான் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.க

இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0