உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் இலவச மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
156 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரின் இலவச மருத்துவ முகாம் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை மன்னார் உப்புக்குளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes), தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள், பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள், ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்), (Breathing Problems) சுவாசப் பிரச்சினைகள், இரத்த அழுத்தம் (Blood pressure) உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவமனை பதிவு புத்தகத்தை (Clinic book) கொண்டு வர வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி கண் நோயாளருக்கு வழங்கப்படுகின்றது.

குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

குறித்த மருத்துவ முகாம் நாளை செவ்வாய்க்கிழமை(18) விடத்தல்தீவு புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்திலும், புதன்கிழமை (19) இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0