உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இஸ்ரேலின் தீர்மானத்திற்கு உலக நாடுகள் கண்டனம்!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
95 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘சமாதான சபை’ முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.

இது அத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதைப் பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

75 0 0