உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஷேக் ஹசீனாவை தம்மிடம் ஒப்படைக்கும் வரை, தமது பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் செய்ய மாட்டார் என பங்களாதேஷ் அறிவிப்பு!

உலக செய்திகள் 3 வாரங்கள் முன்
109 பார்வைகள்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா தம்மிடம் ஒப்படைக்கும் வரை, பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் திரும்ப ஒப்படைக்குமாறு டாக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எதிர்வரும் வாரம் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லக்கூடும் என வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஏ.கே.எம். ஷாஹிதுல் கரீம், இத்தகைய விஜயத்திற்குப் பொருத்தமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

இதற்காக, ஷேக் ஹசீனா மற்றும் ஏனைய குற்றவாளிகளை விரைவாக நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்தவாறு ஹசீனா ஊடகங்களுக்கு அளித்து வரும் பகிரங்கப் பேட்டிகள் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைச் சூழலைப் பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற தாரிக் ரஹ்மான், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷ் சமர்ப்பித்துள்ள நாடுகடத்தல் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

84 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

120 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

97 0 0
உலக செய்திகள்

அமேசன் வணிக விமானம் விபத்து – ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து…

108 0 0