உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பிரான்ஸில் கடும் காட்டுத்தீ; அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்.!

உலக செய்திகள் 5 நாட்கள் முன்
92 பார்வைகள்

பிரான்ஸின் லேண்டஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் காட்டுத்தீ காரணமாக 525 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்ற லேண்டஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வந்துள்ளது.

இதனால் காடுகள் வறண்டு, தீப்பற்றக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில், லக்லான் கிராமத்திற்கு அருகிலுள்ள காடுகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையுடன் பலத்த காற்றும் வீசியதால், தீ வேகமாகப் பரவி சுமார் 2,700 ஏக்கர் வனப்பகுதியை எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆறு விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீ தற்போது கிராமத்திற்கு மிக அருகில் சென்றுள்ளதால், உயிருக்கு அஞ்சிய 525 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

75 0 0