உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

மன்னாரில் புற்றுநோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
61 பார்வைகள்

மன்னாரில் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று (14) இடம்பெற்றுள்ளது.

மன்னார் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வைத்தியர் சிசிலின் ஒழுங்கமைப்பில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

புற்றுநோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் கிருஷாந்தி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கும் தேவையான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், அதனை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதுடன், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

106 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0