உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; பரிபாலன சபையினர் ஊடக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
79 பார்வைகள்

புரவுன்லோ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 30.08.2026 இல் மிக விமர்சையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆலய பரிபாலன சபையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட ஊடக சந்திப்பு நேற்று 13 ஆம் திகதி ஆலய வளாகத்தில் உள்ள புரவுன்லோ தோட்ட கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முக்கிய அம்சங்கள் & திட்டமிடல்கள்
கும்பாபிஷேகத் தயார்படுத்தல்கள், ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் கிரியை நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

பக்தர்களுக்கான வசதிகள், பெருவிழா நாட்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் அன்னதான வசதிகள் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக பரிபாலன சபை தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் அடங்களாக நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊடகங்களின் பங்களிப்பு ஆன்மீகச் சிறப்புமிக்க இந்நிகழ்வை உலகெங்கும் உள்ள பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், செய்திகளை அச்சு ஊடகம் மற்றும் நேரலை ஒளிபரப்புகளையும் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ ச.கனகராஜ் குருக்கள் பரிபாலன சபையின் தலைவர் வேலுசாமி கிருஷ்ணகுமார் அசோக், செயலாளர் ராமலிங்கம் வைத்தியலிங்கம், பொருளாளர் மாரிமுத்து மகேந்திரன் முக்கிய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0