உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பூநகரியில் காற்றாலை அமைக்கும் திட்டம்; பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
107 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.

பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும்.

கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, பூநகரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி திரு. சுப்பிரமணியம் சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் திரு. கண்ணதாசன், கட்சியின் செயற்பாட்டாளர் திரு. குபேந்திரன் ஆகியோருடன் ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0