உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

சவுதி இளவரசருக்கும் அமெரிக்க CENTCOM தளபதிக்கும் இடையே சந்திப்பு!

உலக செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

சவுதி அரேபியாவின் இளவரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பீடத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக சவுதி அரசு செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பரஸ்பர பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதோடு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பொப் அல்-மந்தேப் நீரிணை (Bab al-Mandeb Strait), செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய கடல் வழிகளூடான போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, சவுதி அரேபியாவினால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு கூட்டமைப்பின் 3ஆவது திட்டமிடல் அமர்வு நேற்று சவுதியில் நடத்தப்பட்ட நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

13 வயதில் செய்த சாதனை – பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை வழங்கிய சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 13 வயதான இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் இணைந்து உருவாக்கிய செயலியின் மூலம், பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000-க்கும் மேற்பட்ட…

99 0 0
உலக செய்திகள்

பீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது. இம்முறை…

52 0 0
உலக செய்திகள்

கார்க் தீவு அருகே ஈரான் எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா!

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில்…

78 0 0
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவின் புதிய உலக வரைபடம் 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

48 0 0