உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்த நாசா!

உலக செய்திகள் 1 மாதம் முன்
57 பார்வைகள்

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கி, அங்கு நிரந்தர குடியிருப்பு அமைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மூன் பேஸ்’ (Moon Base) திட்டத்தில் இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு (ISRO) அமெரிக்காவின் நாசா (NASA) அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தியா – அமெரிக்க சிவில் ஸ்பேஸ் கூட்டுக் பணிக்குழுவின் 9 ஆவது கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்டெமிஸ் ஒப்பந்தங்களின்’ (Artemis Accords) கீழ் அறிவியல் தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கூட்டுத் திட்டமான ‘நிசார்’ (NISAR) செயற்கைக்கோள் வெற்றி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டமை போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விண்வெளி உறவு மேலும் வலுவடைந்துள்ளது.

அமெரிக்கா தனது ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதனைத் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

38 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

46 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0
உலக செய்திகள்

நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!

கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி…

20 0 0