உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் அரிய சூரிய கிரகணம்!

உலக செய்திகள் 4 வாரங்கள் முன்
119 பார்வைகள்

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்த்த மக்களுக்குப் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்ததோடு, அது பிரித்தானிய நேரப்படி நேற்று இரவு 7.00 மணிக்குச் சற்றுப் பிந்தி உச்சக்கட்டத்தை அடைந்தது.

அந்த நேரத்தில் சூரியனின் 90% க்கும் அதிகமான பகுதியைச் சந்திரன் மறைத்திருந்ததைக் காண முடிந்தது.

எனினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் முழுச் சூரிய கிரகணத்தை அனுபவிக்க முடிந்ததாகவும், அந்நேரங்களில் பகல் வேளையிலும் கூட அப்பகுதிகள் முழு இருளில் மூழ்கியமை ஒரு சிறப்புமிக்கக் காட்சியாக அமைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காகத் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே ஆச்சரியக் குரல்களும் ஆரவார ஒலிகளும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அரிய சூரிய கிரகணமானது பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும் இயற்கையின் விசித்திரத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

91 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

127 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

97 0 0
உலக செய்திகள்

அமேசன் வணிக விமானம் விபத்து – ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து…

108 0 0