உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
157 பார்வைகள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும், உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு பகுதிக்குரிய மணல் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று 12.08.2026 திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவான இந்த நடவடிக்கையின் போது குறித்த வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களையும், வாகனங்களையும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகளையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர் .

தடையப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

120 0 0