உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் பல கோடி ரூபாய் மோசடி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
175 பார்வைகள்

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக நபரொருவர் ஒன்றரைக் கோடி ரூபாவை இழந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளனர். கனடா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவே அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன.

எந்தச் செலவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்’ என்றவாறாக அமைந்துள்ள விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுகின்றனர். காலப் போக்கில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் மோசடியாளர்கள் அவர்களின் வங்கித் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அதன் பின்னர் ஒரு தொகைப் பணத்தை வங்கியிலிட்டுக் காட்டுமாறு கூறிவிட்டு கடவுச்சொல்லைத் திருடி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0