உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அதிபர் நியமனத்தில் முறைகேடு; ஆளுநருக்கு பறந்த கடிதம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
149 பார்வைகள்

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாக உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர் நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1-ஐச் சேர்ந்த ஒருவரே அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை தரம் 3-இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.

அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3-இல் உள்ள தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில் உள்ளனர். இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், “டி லா சால்” (De La Salle) கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள் இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்:

தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும் தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக் கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது மிகுந்த அநீதியாகும். எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்.

சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப் போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.

நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப் பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விடயத்தில் கௌரவ ஆளுநர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0