உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட வானூர்தி!

உலக செய்திகள் 1 வாரம் முன்
87 பார்வைகள்

கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து வானூர்திப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், வானூர்திகளில் சிறுவர்கள் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ‘போர்ட்டர் எயார்லைன்ஸ்’ (Porter Airlines) வானூர்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வானூர்தி புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் வானூர்தி ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் வானூர்தியை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.

இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், வானூர்தியை அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் சிறுவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் வானூர்தி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

சிறுவன் ஒருவனின் நடத்தையால் முழு வானூர்தி பயணமும் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும், அந்த குடும்பத்தை மட்டும் உடனடியாக வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

முன்னதாக 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சவுத் வெஸ்ட் எயார்லைன்ஸ் (Southwest Airlines) மற்றும் ஜெட்ப்ளூ (JetBlue) ஆகிய வானூர்தி நிறுவனங்களிலும், ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வானூர்திகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0