உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

உலக செய்திகள் 1 வாரம் முன்
57 பார்வைகள்

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் 7.4 மெக்னிடியுட் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதுடன், தலைநகர் போகோட்டாவில் உள்ள மக்களும் பாதுகாப்பு கருதி அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலநடுக்கம், தலைநகர் போகோட்டாவிற்கு மேற்கே சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சொகோ பிராந்தியத்தின் சென் ஜோஸ் டெல் பால்மர் பகுதியில், 107 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதன் தாக்கம் அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்ட போதிலும், அங்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த பெரெய்ரா, மேனிசேல்ஸ், குவிப்டோ, ஆர்மீனியா, கார்டாகோ மற்றும் புவெனவென்ச்சுரா ஆகிய 6 வானூர்தி நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் வானூர்தி; போக்குவரத்து முகவரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கப் பாதிப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கொலம்பிய அரசாங்கத்திற்கும் கொலம்பியா மக்களுக்கும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0