உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு : பிரதமர் மீது முட்டைகளை வீசித் தாக்குதல்.!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
117 பார்வைகள்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவின் நாடாளுமன்றத்தில், பிரதமர் அல்பின் குர்தி (Albin Kurti) மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டைம் கத்ரிஜா (Time Kadrijah) முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் அல்பின் குர்தி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டைம் கத்ரிஜா, பிரதமர் மீது திடீரென முட்டைகளைச் சரமாரியாக வீசினார்.

பாதுகாப்புப் படையினரும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைத் தடுத்து நிறுத்தினர். பாதுகாப்புப் படையினர் பிரதமரை உடனடியாகச் சூழ்ந்து பாதுகாப்பு அளித்தனர்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்பின் குர்தியின் கட்சி 120 இடங்களில் 53 இடங்களைப் பெற்றது.

இந்த நிலையில் அல்பின் குர்தி இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றார்.

தற்போது பதில் ஜனாதிபதியாக அல்புலேனா ஹக்ஷியு (Albulena Haxhiu) பதவியிலிருக்கும் நிலையில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட கூடுதல் அவகாசம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அல்பின் குர்தி கோரிக்கை விடுத்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0