உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பவானி வீதி குறித்த மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
153 பார்வைகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழை பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம் காட்டியிருந்தார்.

இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி. வடக்கு பிரதேச சபை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு எதிராக பலாலி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, வலி. வடக்கு பிரதேச சபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது’ என நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனால் பிரதேச சபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழைப் பொலிஸார் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் பொலிஸாரிடம் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0